'மாநாடு' படத்தின் முழு தகவல்கள் இதோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிக்கவிருக்கும் 'மாநாடு’ திரைப்படத்தின் அறிவிப்புகள் இன்று மாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் வெளியாகிவிட்டன.
இந்த படத்தில் சிம்புவுடன் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், இயக்குனர் பாரதிராஜா மற்றும் காமெடி நடிகர் கருணாகரன் ஆகியோர் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதனை அடுத்து இந்த படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரேம்ஜி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன் அவர்களும், படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல். அவர்களும் பணிபுரிய இருப்பதாகவும் இந்த படத்தின் கலை இயக்குனராக சேகர் அவர்கள் பணிபுரிய இருப்பதாகவும் புரடக்சன் டிசைனராக ராஜீவன் நம்பியார் பணிபுரிய இருப்பதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22ம் தேதி முதல் மலேசியாவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்று வெளியாகியுள்ள மாநாடு படத்தின் அறிவிப்புகள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#sureshkamatchimaanadu DOP @Richardmnathan @vp_offl pic.twitter.com/IHmNHXjo3W
— sureshkamatchi (@sureshkamatchi) January 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com