லாக்டவுன் தொடர்ந்தாலும் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும்: 'மாநாடு' நாயகியின் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் திட்டமிட்டபடி எங்கள் படம் ரிலீசாகும் என ’மாநாடு’ படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகளும் சிம்புவின் ’மாநாடு’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும், ப்ரனவ் மோகன்லால் நாயகனாகவும் நடித்துள்ள மலையாளத் திரைப்படம் ’ஹிருதயம்’. பிரபல மலையாள இயக்குனர் வினித் ஸ்ரீநிவாசன் இயக்கிய இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் ஜனவரி 21-ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லாக்டவுன், இரவு நேர லாக்டவுன் காரணமாக இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில் சற்று முன் கல்யாணி பிரியதர்ஷினி தனது டுவிட்டர் பக்கத்தில், ’இரவு நேர லாக்டவுன், ஞாயிறு லாக்டவுன் மற்றும் ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் திட்டமிட்டபடி ஜனவரி 25ஆம் தேதி ’ஹிருதயம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்’ என்று அறிவித்துள்ளார்.
21st Jan 2022, in Theatres. We hope we have your love, support, and blessings. ????♥️???? - love from Team Hridayam pic.twitter.com/tFwTyWZ0UF
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) January 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments