என்ன தலைவரே, திரும்பவும் லூப்பா? ஆனால் இது வேற மாதிரியா இருக்கு? ஜிவி 2' டிரைலர் குறித்து 'மாநாடு' நடிகர்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தமிழின் முதல் ‘லூப்’ கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ‘லூப்’ திரைப்படம் வெளியாகிறதா என்ற கேள்வியை ‘மாநாடு’ படத்தில் நடித்த நடிகர் ட்ரைலரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் வெற்றி நடித்த ’ஜிவி’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’ஜிவி 2’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்பியல், முக்கோண விதி மற்றும் மையப்புள்ளி ஆகிய மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் எப்படி விளையாடுகிறது என்பது குறித்த கதையம்சம் தான் இந்த படம். சுமார் 2 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ‘மாநாடு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த எஸ்ஜே சூர்யா இந்த டிரைலரை பார்த்து, ‘என்ன தலைவரே, திரும்பவும் லூப்பா? ஆனால் இது வேற மாதிரியா இருக்கு? என்று பதிவு செய்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜேசூர்யா இந்த கேள்வியை கேட்க முக்கிய காரணம் ‘மாநாடு’ படத்தை தயாரித்த அதே சுரேஷ் காமாட்சி தான் ’ஜிவி 2’ படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.