'மாநாடு' திரைப்படம் டிரப்பா? சுரேஷ் காமாட்சி விளக்கம்

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருப்பதால் இந்த படம் டிராப் ஆகி விட்டதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. அரசு ஒருவேளை படப்பிடிப்புக்கு அனுமதி தந்தாலும் 70 முதல் 80 பேர் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் மாநாடு திரைப்படத்திற்கு மிகப் பெரிய கூட்டம் தேவைப்படுகிறது என்றும், அது மட்டுமின்றி அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக நபர்கள் தேவைப்படும் என்றும், இதனால் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த படத்தின் காட்சிகளை படமாக்க முடியாது என்றும், அதனால் இந்த படம் டிராப் செய்யப்படுவதாகவும் இயக்குனர் வெங்கட்பிரபு கூறியதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது

இந்த செய்தியை மறுத்ததோடு இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்து உள்ளார். நான் பொதுவாக மீடியாவை மதிக்கும் பழக்கம் உடையவன். ஆனால் இதுபோன்ற பொய்யான செய்தி வருத்தப்பட வைக்கின்றது. இதுபோன்ற அறிக்கையை நானோ, இயக்குனராகவும் வெளியிடவே இல்லை. தயவுசெய்து ஒரு செய்தியை வெளியிடும் முன் தயாரிப்பாளர்களிடம் உறுதி செய்துகொண்டு வெளியிடுங்கள் ’மாநாடு’ டிராப் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே தயவுசெய்து இதுபோன்ற வேலையை நிறுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார். சுரேஷ்காமாட்சியின் இந்த விளக்கத்தை அடுத்து ’மாநாடு’ திரைப்படம் டிராப் ஆகாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது