close
Choose your channels

'மாமன்னன்' முதல் நாள் வசூல் இவ்வளவா? ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாரி செல்வராஜ்..!

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

‘பரியேறும் பெருமாள்’ ’கர்ணன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதாக பெரும்பாலான விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று படம் பார்த்த பொதுமக்களும் இந்த படம் நன்றாக இருப்பதாகவும் குறிப்பாக வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பு சூப்பர் என்றும் ஏஆர் ரகுமான் இசை மற்றும் பாடல்கள் அருமை என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 700 திரையரங்குகளில் இந்த படம் வெளியான நிலையில் முதல் நாளில் இந்த படம் ரூபாய் 6 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது . இதனை அடுத்து மாரி செல்வராஜின் ஹாட்ரிக் வெற்றிக்கு கோலிவுட் திரை உலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment