மேலும் 4 சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த ‘மாமனிதன்‘ திரைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமனிதன்‘ திரைப்படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த நிலையில் தற்போது பூட்டான் நாட்டின் டுருக் சர்வதேச திரைப்பட விழாவில் மேலும் 4 விருதுகளை வென்றுள்ளது.
யுவன்சங்கர் ராஜாவின் YSR நிறுவனத் தயாரிப்பில் முதல் முறையாக இளையராஜாவும் யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. நீண்ட நாட்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்தத் திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுப் பின்னர் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் இதுவரை இந்தத் திரைப்படம் 10 சர்வதேசத் திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் என்னும் கோல்டன் விருதைப் பெற்று பெருமை சேர்த்தது.
இந்தோ பிரெஞ்ச் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் எனும் பிரிவில் 2 விருதுகளைக் குவித்தது.
மேலும் தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘மாமனிதன்‘ திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த சாதனை விருது, விமர்சகர்கள் தேர்வு எனும் 2 பிரிவுகளிலும் விருதினைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பூட்டான் நாட்டில் நடைபெற்ற டுருக் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த குடும்பத் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் எனும் 4 பிரிவுகளில் விருதுகளைக் குவித்துள்ளது.
Love to @YSRfilms @thisisysr
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) August 9, 2022
Thanks tohttps://t.co/GJetWW5tdP #Maamanithan had won
3 prestigious awards in Tagore International film festival Kolkata@ahatamil @ahavideoIN @ilaiyaraaja@VijaySethuOffl @studio9_suresh@SGayathrie @shajichen @ramjisoma7 @onlynikil @Riyaz_Ctc pic.twitter.com/rHpRacQRS6
Love to @YSRfilms
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) August 6, 2022
❤️ ??@thisisysr @ilaiyaraaja @VijaySethuOffl @SGayathrie @shajichen @sreekar_prasad @gurusoms @mynnasukumar @onlynikil @CtcMediaboy @ahavideoIN
#Japanese #Vinoth #John #SrinathViswanathan#BestAsianMovies #GreatMan #Maamanithan https://t.co/ddnGvHOAQI pic.twitter.com/Dnl8hCh2Ms
Love to @YSRfilms
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) August 6, 2022
❤️ ??@thisisysr @ilaiyaraaja @VijaySethuOffl @SGayathrie @shajichen @sreekar_prasad @gurusoms @mynnasukumar @onlynikil @CtcMediaboy @ahavideoIN
#Japanese #Vinoth #John #SrinathViswanathan#BestAsianMovies #GreatMan #Maamanithan https://t.co/ddnGvHOAQI pic.twitter.com/Dnl8hCh2Ms
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments