நானும் அப்பாவும் இணைந்து கொடுக்கும் சர்ப்ரைஸ்: யுவன்ஷங்கர் ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன பின்னரும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் ’முதல்முறையாக நானும் அப்பாவும் இணைந்து ’மாமனிதன்’ படத்தில் பணிபுரிந்து உள்ளோம். எனவே ’மாமனிதன்’ படத்தின் ஆல்பம் இசை பிரியர்களுக்கு ஒரு சர்ப்ரைசாக இருக்கும் என்பதை நான் உறுதி கூறுகிறேன் என்று கூறியுள்ளார். இசைஞானியும் இளைய இசைஞானியும் இணைந்து கொடுக்கும் சர்ப்ரைஸை சந்திக்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இந்த டுவீட்டை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் விஜய்சேதுபதி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவதால் இசை வெளியீட்டின்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
For the very first time, appa and me working together! #Maamanidhan this album will definitely surprise all music lovers ❤️ @VijaySethuOffl @SGayathrie @seenuramasamy @pavijaypoet @U1Records @YSRfilms @irfanmalik83 pic.twitter.com/TAPf7HKR5V
— Raja yuvan (@thisisysr) September 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments