வெங்கையா நாயுடு டுவிட்டர் புளூ டிக் சர்ச்சை...! என்ன ஆச்சு...!
- IndiaGlitz, [Saturday,June 05 2021]
குடியரசுத்தலைவர் வெங்கையா நாயடு-வின், டுவிட்டர் கணக்கில் இருந்து ப்ளு டிக் நீக்கப்பட்டதாக கிளம்பிய சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
வெங்கையா நாயுடுவின் டுவிட்டரில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் கிளம்பின. கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து ப்ளூ டிக் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் முன்னணி வலைத்தளமாக டுவிட்டர் இருந்து வருகிறது. டுவிட்டரில் ஆகிட்டிவாக இருக்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும், இந்த ப்ளூ டிக் வழங்கப்படுகிறது.
ஒரு சில புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து, புளூ டிக் வழங்கும் முறையை தற்சமம் நிறுத்தி வைத்திருந்தது டுவிட்டர் நிறுவனம். பிரச்சனைகள் முடிவிற்கு வந்த நிலையில், நீல நிற டிக் வழங்கும் முறையை தொடர்ந்துள்ளது.
குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு நீல நிற டிக் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அந்த வசதியை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இந்த டுவிட்டர் கணக்கு, இறுதியாக கடந்த வருடம் ஜூலை மாதம், 23-ஆம் தேதி பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக வெங்கையா நாயுடுவின், கணக்கு பயன்படுத்தப்படாத நிலையில் டுவிட்டர், நீல நிற டிக்கை திரும்ப பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்நிறுவனம் புளூ டிக்கை திரும்ப தந்துள்ளது.