பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்ற தோனி & கோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அது போட்டி அல்ல போர் என்று இருநாட்டு ரசிகர்களும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் இந்திய வீரர்கள் வென்ற உணர்ச்சிமிக்க சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.
இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு அடிகோலியவர் தொடக்க ஆட்டக்காரர் அசார் அலி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பொறுமையாக விக்கெட் இழக்காமல் எடுத்த 59 ரன்கள் தான் வெற்றிக்கு அஸ்திவாரம். இந்த நிலையில் இன்று அதிகாலை அசார் அலியின் இரண்டு குழந்தைகளும் இந்திய அணி வீரர்களான தோனி, விராத் கோஹ்லி, மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர்களுடன் ஜாலியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
'என்னுடைய குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கிய இந்திய வீரர்களுக்கு என மனமார்ந்த நன்றி' என்று புகைப்படத்துடன் அசார் அலி தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். எதிரணி மட்டுமின்றி எதிரி நாட்டு அணியாகவும் உள்ள பாகிஸ்தான் வீரரின் குழந்தைகளுடன் இந்திய வீரர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் வைரலாகி பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்றது.
ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னர் தோனி, கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் குழந்தையை, தன் கையில் தூக்கி வைத்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது மீண்டும் இந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments