தோனி என்னும் தலைவன்: சிறப்பு தொடர்

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

 

தல தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமின்றி பல நல்ல பண்புகளை கொண்டு அனைவரும் மதிக்கும் வகையில் நடந்து கொண்டவர். குறிப்பாக அவரது எந்த செயலிலும் சுயநலம் என்பதே இருக்காது

பல போட்டிகளின் ஃபினிஷர் தோனி தான் என்பது தெரிந்ததே. இதை அவர் வேண்டுமென்றே கொண்டு சென்றது இல்லை. தானாகவே அமைந்துவிட்டது என்பதுதான் உண்மை. இருப்பினும் ஒருசில நேரத்தில் ஆட்டத்தை தான் பினிஷிங் செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு விட்டு கொடுத்து தள்ளி நின்று அந்த பினிஷிங்கை ரசிக்கும் குணம் உடையவர் தல தோனி

கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. தல தோனி பேட்டிங் செய்ய வேண்டும். விராத் கோஹ்லி ரன்னராக இருந்தார். மைதானத்தில் இருந்த அனைவரும் தோனி தனது ஸ்டைலில் போட்டியை முடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்தில் தோனி ரன் அடிக்கவில்லை. ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பை அவர் கோஹ்லிக்கு வழங்கினார். கோஹ்லி வின்னிங் ஷாட் அடித்ததை மகிழ்ச்சியுடன் இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்து ரசித்தவர் தோனி. அவருடைய சுயநலமில்லா மனதிற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம் ஆகும்



மேலும் தோனியின் சுயநலமில்லா குணத்திற்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் அனைத்து அணிகளிலும் பிரபல வீரர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னரே தங்களது இறுதி போட்டி இதுதான் என்று அறிவித்துவிட்டு அந்த போட்டியை முக்கியத்துவம் உள்ள போட்டியாக மாற்றுவதுண்டு. அதேபோல் ஓய்வு பெற்ற பின்னர் அவருக்கு சிறப்பான வழியனுப்பும் விழாவும் நடத்தப்படும்.

இந்திய அணியின் பிரபல பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ஓய்வு பெறும்போது அவரை தனது தோளில் தூக்கி வைத்து மரியாதை கொடுத்தவர் தோனி தான். அதேபோல் சவுரவ் கங்குலி ஓய்வு பெறும்போது அவரை தனது தோளில் தூக்கி கொண்டாடினார். சச்சின் ஓய்வு பெறும் அந்த கடைசி போட்டியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அன்று என்ன நடந்தது தெரியுமா?


யாரும் அவரை தோளில்  வைத்து கொண்டாடவில்லை, அழுது கொண்டே ஒரு பேட்டி இல்லை, நெகிழ்ச்சியான வழியனுப்பும் சம்பவம் இல்லை. ஏனெனில் அவர் ஓய்வு பெறும் போட்டியை முன்கூட்டியே அறிவிக்கவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3வது டெபோட்டி முடிந்ததும் அளித்த பேட்டியில் தான் தோனி தனது ஓய்வை சர்ப்ரைஸ் ஆக அறிவித்தார். புகழ்ச்சி, பாராட்டு, வழியனுப்பும் விழா எதனையும் விரும்பாததால் தோனி தனது ஓய்வை முன்கூட்டியே அறிவிக்கவில்லை என்பதும் அவருடைய சுயநலமின்மைக்கு இதுவும் ஒரு எடுத்து காட்டாகவும் விளங்குகிறது

தோனியின் சிறந்த குணங்கள் இன்னும் வரும்......

More News

முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து எது தெரியுமா? கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளார்.

நேற்று ஸ்டாலின் பழமொழிகள், இன்று அமித்ஷா உளறல்கள்: நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்

கடந்த இரண்டு நாட்களாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்றும் பூனை மேல் மதில் போல் என்றும் பழமொழிகளை மாற்றி சொன்னதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார்.

விஜய்யின் இந்த திடீர் மாற்றம் ஏன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் நரேனிடம் நம்பிக்கை மோசடி செய்தது யார்? டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் 16' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

டேட்டா லீக் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து விலகினார் பிரபல நடிகர்

சமீபத்தில் ஃபேஸ்புக் பயனாளிகளின் டேட்டாக்கள் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ச் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தால் திருடப்பட்டு அவை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும்,