சிம்புதேவன், எம்.ராஜேஷ், வெங்கட்பிரபு, பா ரஞ்சித் இணையும் படம்: டிரைலர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான சிம்புதேவன், எம் ராஜேஷ், வெங்கட் பிரபு மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் இணையும் நான்கு கதைகள் கொண்ட திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரில்லர் கதை ’Mirrage', சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கொட்டைப்பாக்கு வத்தலம் மொட்டைமாடி சித்திரம்’, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'Confession' மற்றும் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘Dhammam' ஆகிய நான்கு கதைகள் கொண்ட திரைப்படம் ‘விக்டிம்’ சோனிலைவ் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நான்கு கதைகளில் நாசர், ப்ரியா பவானிசங்கர்,நட்டி நட்ராஜ், கலையரசன், குரு சோமசுந்தரம், பிரச்சன்னா, அமலாபால் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் டிரைலரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Watch the official trailer of #Victim - Who is next? A SonyLIV Tamil original directed by @chimbu_deven,@rajeshmdirector @vp_offl, @beemji. Streaming exclusively only on #SonyLIV from the 5th of August.#VictimOnSonyLIV@AxessFilm @blackticketco #Nasser @priya_Bshankar pic.twitter.com/XBvihPOWst
— SonyLIV (@SonyLIV) July 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments