இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பது உண்மையா?

  • IndiaGlitz, [Sunday,July 28 2019]

பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் சமீபத்தில் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வெளியான நிலையில், அவர் தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். தனது அடுத்த படம் காமெடி மட்டுமின்றி ஒருசில வித்தியாசமான மாற்றங்கள் இருக்கும் என்றும் அதற்காக அந்த படத்தின் திரைக்கதையை தற்போது எழுதி வருவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

இந்த நிலையில் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கவிருப்பதாகவும், சமீபத்தில் இருவரும் சந்தித்து இதுகுறித்து பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை இயக்குனர் ராஜேஷ் மறுத்துள்ளார். சமீபத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தது சந்தித்து பேசியது உண்மைதான் என்றும் ஆனால் அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்கும் எண்ணத்துடன் சந்திக்கவில்லை என்றும் இந்த சந்திப்பு சாதாரணமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று கடந்த சில நாட்களாக வெளிவந்த இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.