எம்.ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் பட டைட்டில் அறிவிப்பு: இன்று மாலை மீண்டும் ஒரு அப்டேட்!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

ஜீவா நடித்த ’சிவா மனசுல சக்தி’ ஆர்யா நடித்த ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ உதயநிதி நடித்த ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் எம் ராஜேஷ். இவர் தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்தநிலையில் சற்றுமுன் ஜிவி பிரகாஷ் மற்றும் எம்.ராஜேஷ் இணையும் திரைப்படத்தின் டைட்டில் ’வணக்கம்டா மாப்ள’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அப்டேட்டாக இன்று மாலை 4 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலஞ்களான டேனியல், ரேஷ்மா உள்பட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.