விஜயபாஸ்கரிடம் சிக்கிய ஆவணங்கள்...! வங்கி லாக்கரில் சோதனை செய்ய திட்டம்....!

விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தான், மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அண்மையில் இவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூர் போன்ற ஊர்களில் உள்ள, 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். 13 மணிநேரம் 26 இடங்களில் கடுமையான பரிசோதனை நடத்தப்பட்டது. இவரின் தம்பி சேகர் என்பவர் பெயரிலும், மனைவி விஜயலட்சுமி பெயரிலும் மற்றும் இவர் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைக்கப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த இந்த சோதனையில், சுமார் ரூ.25,56,000 ரொக்கம் பணமும், பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் சேர்த்துள்ள முதலீடுகள் குறித்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பாக கூறப்பட்டுள்ளது.

மேலும் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி வங்கிக் கணக்கையும், வங்கி லாக்கரையும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.