நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து.
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தை தற்போது பார்ப்போம்.
குன்ஹா கொடுத்த தீர்ப்பு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 21 வருடங்களுக்கு பின் நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தாமதம் ஆனாலும் தப்பிக்க முடியாது. பொதுவாழ்வில் இருப்பவர்கள் தூய்மைக்கு இலக்கணமாக இருக்க வேண்டும். தூய்மையில் இருந்து விலகக்கூடாது என்பதே இந்த தீர்ப்பு ஆணித்தரமாக தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஆகும்.
இந்த தீர்ப்பை அடுத்து கவர்னர் உடனடியாக நிலையான ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout