மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி. திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
- IndiaGlitz, [Wednesday,January 04 2017]
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சற்று முன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் காரனமாக இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு நடந்து வருகிறது.
இந்த பொதுக்குழுவில் திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவில் செயல் தலைவர் பதவி உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும் ஸ்டாலின் ஏற்கனவே வகித்து வந்த பொருளாளர் பதவியிலும் அவரே தொடர்வார் என தெரிகிறது.
மேலும் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பு
2. தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணம்.
3. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக!
4. தமிழக விவசாயிகளின் தணியாத துயரம்!
5. மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்
6. "நீட்" நுழைவுத் தேர்வை ரத்து செய்க!
7. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை
8. கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் வழிபாட்டிற்கு அனுமதி
9. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
10. சேலம் இரும்பாலையைத் தனியார்மய மாக்கும் முயற்சியைக் கைவிடுக!
11. கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை!
12. வர்தா புயல் நிவாரணம் வழங்குக!
13. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விரைவாக தேர்தல்களை நடத்தி, உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாத்திட மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்படுகிறது.
14. பொது விநியோகத் திட்டக் குளறுபடிகளைக் களைய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
15. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.
16. ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.