நீ நெனச்சது எல்லாம் ஒவ்வொண்ணா ஏன் நடக்குது தன்னால: அஜித் குறித்து பாடலாசிரியர் எழுதிய கவிதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் தற்போது ’வலிமை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
தமிழக அளவில் நடந்த 46-வது துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் தங்கப்பதக்கம் வென்றார் என்றும் அதுமட்டுமின்றி தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு அவர் தேர்வு பெற்றுள்ளார் என்று வெளிவந்த செய்தியையும் பார்த்தோம்
அஜித்துக்கு தங்க மெடல் கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சினிமா, மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் உள்பட பல துறைகளில் சாதித்து வரும் அஜீத் தற்போது துப்பாக்கி சுடும் போட்டியிலும் தங்கம் வென்று சாதித்துள்ளதை அடுத்து விரைவில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் விவேகா தனது சமூக வலைத்தளத்தில் அஜீத்துக்கு வாழ்த்து கூறிய கவிதை ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
நீ நெனச்சது எல்லாம்
ஒவ்வொண்ணா
ஏன் நடக்குது தன்னால..
மேல் இருக்குற மேகம்
ஓயாம பூ தூவட்டும்
உன் மேல...
I wish #Ajith sir for winning gold medal from 46th Tamilnadu State Shooting Championship Competition.#AjithKumar#CongratsTHALAAjith
— Viveka Lyricist (@Viveka_Lyrics) March 8, 2021
நீ நெனச்சது எல்லாம்
ஒவ்வொண்ணா
ஏன் நடக்குது தன்னால..
மேல் இருக்குற மேகம்
ஓயாம பூ தூவட்டும்
உன் மேல... pic.twitter.com/8AUXzCXoGR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com