தனுஷின் அடுத்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். சத்யஜோதி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என்பதும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் திரைக்கதை வசனம் எழுதும் நபர் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் அவர்கள் தான் இந்த படத்தின் திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அட்டகாசமான பாடல்களை எழுதிய விவேக் தற்போது தனுஷின் அடுத்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக மாறியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
@Lyricist_Vivek na????❤️#D43 https://t.co/SHCNBexuhR
— Karthick Naren (@karthicknaren_M) January 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com