'சர்கார்' பட பாடலுக்கு விளக்கம் அளித்த பாடலாசிரியர் விவேக்
- IndiaGlitz, [Monday,September 24 2018]
விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் விவேக் ஆகியோர் மெர்சல் படத்திற்கு பின்னர் மீண்டும் 'சர்கார்' படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன்' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன்' குறித்து பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சிம்டாங்காரன்' என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், மற்றும் துடுக்கானவன் என்று விவேக் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் சிம்டாங்காரன் என்று பாடலின் ஒரு வரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவேக் கூறிய இந்த விளக்கத்தால் உடனே இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ஆவலை தூண்டுவதாக விஜய் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்