'சர்கார்' பாடல் விமர்சனத்திற்கு பாடலாசிரியரின் பதிலடி

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' சிங்கிள் பாடலான 'சிம்டங்காரான்' பாடல் மிக அதிக பார்வையாளர்களை பெற்று விஜய் ரசிகர்களின் வரவேற்புக்கு உள்ளானாலும், ஒருசிலர் இந்த பாடலை கேலியும் கிண்டலும் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். இந்த பாடலில் உள்ள 'சிம்டங்காரன்' உள்ளிட்ட ஒருசில வார்த்தைகள் 'பாகுபலி' படத்தில் மொழியை போல் இருப்பதாகவும், இந்த பாடலின் அர்த்தம் விளங்க இனிமேல்தான் புதிய டிக்சனரி உருவாக்க வேண்டும் என்றும் கிண்டலுடன் கூறியிருந்தனர்

இந்த பாடலை கிண்டலுடன் விமர்சனம் செய்தவர்களுக்கு பாடலாசிரியர் விவேக் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நான் கேலி, கிண்டல் செய்பவர்களை கண்டு கூச்சப்பட்டது கிடையாது. உங்கள் இடத்தில் இருந்து நானும் இந்த பிரச்சனையை புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில் கிண்டல் செய்பவர்கள் இந்த படத்தோடு பாடலையும் கேட்டால் தங்கள் மனதை மாற்றி கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்கு பின்னரும் இந்த பாடலில் மாற்றம் தேவை என்று கூறினால், இனிவரும் பாடல்களில் அதற்கு ஏற்றால்போல் மாற்றி கொள்கிறேன்.

இந்த பாடலின் வரிகள் படத்தின் காட்சிக்கு பொருத்தமாக இருந்ததால்தால் இயக்குனர் முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ரஹ்மான் ஆகியோர் அனுமதித்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த பாடலை பார்த்து ரசித்ததற்கு நன்றி தெரிவிக்கின்றேன்

More News

இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: சுனாமி தாக்கியதால் பரபரப்பு

இந்தோனேஷியா நாட்டில் சற்றுமுன் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் இருந்ததால் சுனாமி தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டது

விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரி ரெய்டா?

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என தகவல்கள் பரவியது.

'செய்றதுனா சொல்றதுல்ல;செய்றது': சண்டக்கோழி 2' டிரைலர் விமர்சனம்

விஷால், லிங்குசாமி கூட்டணியில் உருவான 'சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

'நோட்டா' திரைப்படத்தின் சென்சார் தகவல்கள்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கள்ளக்காதல் குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

திருமணத்திற்கு பின்னர் 'தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல என்றும் திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது