தனுஷ் படத்தில் இருந்து விலகிய விவேக் மீண்டும் இணைந்ததாக அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்திலிருந்து விலகியதாக நேற்று பாடலாசிரியர் விவேக் தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் தனுஷ் படத்தில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய ‘மாறன்’ படத்தின் வசனகர்த்தா பாடலாசிரியர் விவேக் என நினைத்து அவரை நெட்டிசன்கள் பாராட்டிய நிலையில், தான் அந்த படத்திற்கு வசனம் எழுதவில்லை என்றும் அந்த படத்திற்கு வசனம் எழுத முதலில் ஒப்புக் கொண்டு அதன் பின் விலகி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனுஷின் ‘மாறன்’ படத்தில் இருந்து விலகியதாக நேற்று அறிவித்த விவேக், இன்று தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதி உள்ளேன் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் ஒரு அருமையான பாடலை எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், இந்த வாய்ப்பை கொடுத்த தனுசுக்கும் அனிருத்துக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார். மேலும் தனது சொந்த ஊர் சிதம்பரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தான் ’திருச்சிற்றம்பலம்’ என்று பக்தர்கள் கூறி வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தனுஷிடம் இருந்து பிரிந்து இருந்த அனிருத் 7 வருடங்களுக்குப்பின் மீண்டும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூலம் இணைந்துள்ளதை அடுத்து தற்போது ‘மாறன்’ படத்தில் பிரிந்த விவேக் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
I am super excited to be part of the DnA combo. Writing one of the songs in #Tiruchitrambalam
— Vivek (@Lyricist_Vivek) March 4, 2022
Back with my sweetheart and the raging @anirudhofficial bro and working for an artist of sheer class @dhanushkraja sir is always a wonderful feeling.
Ps - My home town is Chidambaram??
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com