சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு: நிவர் குறித்து கவிப்பேரரசு கவிதை!
- IndiaGlitz, [Wednesday,November 25 2020]
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனை அடுத்து நிவர் புயலை எதிர்கொள்ள பொதுமக்களும், தமிழக புதுவை அரசுகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் நிவர் புயல் குறித்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்
இன்று ஒருநாள் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் புயலை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்றும் பல நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் டுவிட்டர் மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது பாணியில் இந்த நிவர் புயல் பொதுமக்களுக்கு சேதம் இல்லாமல் கரையை கடக்க வேண்டும் என்று தனது பாணியில் கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:
போ புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?
போ புயலே
— வைரமுத்து (@Vairamuthu) November 25, 2020
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?#NivarCyclone #Nivar