'வேல்' குறித்து வேறுவிதமான விளக்கம் அளித்த வைரமுத்து!
- IndiaGlitz, [Monday,January 25 2021]
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக வேல் முக்கிய இடம் பிடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் சமீபத்தில் வேல் யாத்திரை நடத்தினார் என்பதும், அதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே
அதேபோல் சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வேலை கையில் பிடித்துக்கொண்டு கொடுத்த போஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வேல் குறித்து வேறுவிதமான விளக்கம் ஒன்றை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
வேல் என்பது கடவுளின்
கைப்பொருள் மட்டுமில்லை
இரும்புக் காலத்தில்
மனிதன் கண்டறிந்த
வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்
தமிழர்களின்
ஆதி ஆயுதம் வேல்
அது வேட்டைக்கும் உரியது
வழிபாட்டுக்கும் உரியது
போருக்கும் உரியது
மற்றும்
யாருக்கும் உரியது
வேல் என்பது கடவுளின்
— வைரமுத்து (@Vairamuthu) January 25, 2021
கைப்பொருள் மட்டுமில்லை
இரும்புக் காலத்தில்
மனிதன் கண்டறிந்த
வேட்டைக் கருவிகளுள் ஒன்று வேல்
தமிழர்களின்
ஆதி ஆயுதம் வேல்
அது வேட்டைக்கும் உரியது
வழிபாட்டுக்கும் உரியது
போருக்கும் உரியது
மற்றும்
யாருக்கும் உரியது