பாறை என்பது நல்ல வாய்ப்பு: சுர்ஜித் மீட்புப்பணி குறித்து கவிஞர் வைரமுத்து
- IndiaGlitz, [Monday,October 28 2019]
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த பல மணி நேரங்களாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்
நெய்வேலியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஓஎன்ஜிசி-யின் ரிக் என்ற இயந்திரம் பயன்படுத்தப்பட்டு தற்போது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் அமைக்கும் பணி விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருவதை வருகிறது என்பதும் இந்த பணியை துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சுரங்கம் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் சுரங்கம் அமைக்கும் பணி மெதுவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது நான்கு மணி நேரத்தில் வெறும் 10 மட்டுமே தோண்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீட்புப்பணியை நெட்டிசன்கள் சிலர் குறை கூறி வருகின்றனர்
இந்த நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:
அரசு எந்திரத்தையோ
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.
அரசு எந்திரத்தையோ
— வைரமுத்து (@vairamuthu) October 28, 2019
ஆழ்துளை எந்திரத்தையோ
குறை சொல்லும் நேரமில்லை;
குழந்தை மீட்பே குறிக்கோள்.
பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது.
தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.