கவிப்பேரரசு வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி: என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் முன்னணி பாடலாசிரியரும், கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட பாடலாசிரியர், கவிப்பேரரசு வைரமுத்து சற்று முன்னர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதயநோய் பிரச்சனைக்காக உள்நோயாளியாக வைரமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைரமுத்துவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை அடுத்து திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியை அடுத்து பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் கூறியதாவது: கவிப்பேரரசே கள்ளிக்காட்டின் இதிகாசமே இதயநலத்துடன் திரும்பி வருக .மகா பெரியவரையும் ,முருக கடவுளையும் துணைக்கு அழைக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
 

More News

'மாஸ்டர்' படம் குறித்த மாஸ் அறிவிப்பு: விஜய் ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

கொரோனாவை அழிக்கும் எல்.இ.டி பல்புகள்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

பொருட்கள் மற்றும் சுவர்களின் மீது தங்கி இருக்கும் கொரோனா வைரஸை மிக எளிதாகவும் விரைவாகவும் அழிக்கும் புதிய முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

தற்கொலைக்கு முன் சித்ராவிடம் பலமணி நேரம் பேசிய நபர்: ஆடியோ ஆதாரங்கள் மீட்பு

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை குறித்து கடந்த 5 நாட்களாக விசாரணை

தரமான சம்பவம் இருக்கு: முட்டை டாஸ்க்கில் முட்டிக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை ஹவுஸ்மேட்ஸ் ஒரு போர் மாதிரியே விளையாடி வருகின்றனர்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு ரத்து: அப்போ தனியார் பள்ளிகள்?

அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு ரத்து என சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்