நாட்படு தேறல் தேறல்....! வைரமுத்து-வின் மனதை ரணமாக்கும் தாலாட்டு பாடல்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடலாசிரியர் வைரமுத்து அவர்களின் "நாட்படு தேறல்" என்ற தொகுப்பின் கீழ், 8-ஆம் பாடலான, தாலாட்டுப்பாடல் வெளியானது.
கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ், 100 பாடல்களை உருவாக்கியுள்ளார். இப்பாடல்களை 100 இசையமைப்பாளர்கள் இசையமைத்து, 100 பாடகர்கள் வைத்து பாடப்பட்டு, 100 இயக்குனர்களை வைத்து இயக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கலைஞர் மற்றும் இசையருவி சேனல்களில், இத்தொகுப்பின் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் தற்போது 8-ஆவது பாடலான, தாலாட்டுப்பாடல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை இணைத்து, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய, மனதை ரணமாக்கும் தாலாட்டுப்பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
இதுகுறித்து வைரமுத்து அவர்கள் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
"நாட்படு தேறல்
எட்டாம் பாடல்
ஒரே பாட்டுக்குள் மூன்று தாலாட்டு.
1960 - 1990 - 2020 மூன்று தலைமுறைகளின் வாழ்வியல் மாற்றங்கள்
பி.சுசீலா - சித்ரா - ஹரிணி
இது ஒரு சோதனை முயற்சி
என் திரைப்பயணத்தில் இப்படியொரு தாலாட்டு எழுதியதில்லை.
இதில் ஏதோ ஒரு தலைமுறையில் நீங்களும் இருப்பீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடல் வரிகள்:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments