தமிழ் நடிகையுடன் கவிஞர் சினேகன் திருமணம்!

  • IndiaGlitz, [Sunday,July 25 2021]

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும், கவிஞரும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான சினேகனுக்கு ஜூலை 29 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் தமிழ் நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான கவிஞர் சினேகன், அந்நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருக்கிறார் என்பதும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கவிஞன் சினேகன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர் ஒரு நடிகையை காதலித்து வருவதாகவும் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன.

இந்த நிலையில் நடிகை கவிஞர் சினேகன், நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்ய இருப்பதாகவும் இவர்களது திருமணம் சென்னையில் வரும் 29ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து சினேகன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்