பாஜக பெண் தலைவர் மீது புகார் அளித்த சினேகன்: வழக்குப்பதிவு செய்த போலீசார்!

  • IndiaGlitz, [Thursday,October 27 2022]

தமிழக பாஜகவின் மாநில துணை தலைவர் மீது பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்துள்ள நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி பாலாசிரியர்களில் ஒருவரான சினேகன், சினேகம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக நடிகையும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயலட்சுமி தன்னையும் தனது அறக்கட்டளை குறித்தும் அவதூறாக பேசி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலட்சுமியும் சினேகன் மீது புகார் அளித்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சினேகன் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என்று இருவரையும் நேரடியாக அழைத்து விசாரணை செய்த போலீசார் சமரசம் செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் இதற்கு உடன்படாத ஜெயலட்சுமி மீண்டும் காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஜெயலட்சுமியின் இந்த புகாரின் அடிப்படையில் சினேகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சினேகன் கொடுத்த மற்றொரு புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருவரும் மாறிமாறி புகார் அளித்துள்ள நிலையில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் முடிவு என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.