மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாடலாசிரியர்.. நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடலாசிரியர் தனது மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நெகிழ்ச்சியான பதிவு இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் விக்ரம் நடித்த ’தில்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’உன் சமையல் அறையில்’ என்ற பாடலை எழுதியதன் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் கபிலன். அதன் பிறகு விஜய் நடித்த ’யூத்’, ‘திருப்பாச்சி’, ‘போக்கிரி’, அஜித் நடித்த ‘ஆழ்வார்’, ‘மங்காத்தா’, தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, சூர்யா நடித்த ‘ஆதவன்’, உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பாடல் எழுதிய கபிலன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லால் சலாம்’ படத்திற்கும் பாடல் எழுதி வருகிறார்.
இந்த நிலையில் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஆடை வடிவமைப்பாளராகவும் ‘பீயிங் வுமன்’ என்ற இதழையும் நடத்திக் கொண்ட அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது மகள் தூரிகையின் பிறந்த நாளான இன்று அவர் தனது சமூக வலைதளத்தில் மகளை நினைவு கூர்ந்து ஒரு பதிவை செய்துள்ளார். ’மகள் தூரிகைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற இந்த பதிவுக்கு பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout