எங்கே போனாள் தெரியவில்லை.. வாசலில் மட்டும் அவளின் காலணி: மகள் தூரிகை குறித்து கபிலன் எழுதிய கண்ணீர் கவிதை!

  • IndiaGlitz, [Tuesday,September 20 2022]

பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தான் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மகள் பிரிவால் வாடி நிற்கும் கவிஞர் கபிலன் முன்னணி ஊடகம் ஒன்றில் கண்ணீர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

எல்லா தூக்க மாத்திரைகளையும்
அவளே போட்டுக் கொண்டால்
நான் எப்படி தூங்குவேன்..!

எங்கே போனாள்
என்று தெரியவில்லை
அவள் காலனி மட்டும்
என் வாசலில்..!

மின் விசிறி
காற்று வாங்குவதற்கா..
உயிரை வாங்குவதற்கா..?

அவள் கொடுத்த
தேனீர் கோப்பையில்
செத்து மிதக்கிறேன்
எறும்பாய்..?

அவளுக்கு
கடவுள் நம்பிக்கை
இருக்கா இல்லையா
எனக்குத் தெரியாது
அவளே என் கடவுள்..!

குழந்தையாக
அவளை பள்ளிக்குத் தூக்கிச் சென்ற
பாரம் இன்னும் வலிக்கிறது.
கண்ணீர் துளிகளுக்குத் தெரியுமா
கண்களின் வலி.

யாரிடம் பேசுவது
எல்லா குரலிலும்
அவளே பதிலளிக்கிறாள்.

கண்ணீரின் வெளிச்சம் வீடு
முழுக்க நிரம்பி இருக்க
இருந்தாலும் இருக்கிறது
இருட்டு.

பகுத்தறிவாளன்
ஒரு கடவுளை
புதைத்து விட்டான்..!

More News

ஒரே ஒரு சார்ட் காண்பித்தார், மொத்த புக்கையும் படிச்ச மாதிரி ஆயிடுச்சு: பொன்னியின் செல்வன் குறித்து ஜெயராம்!

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

தமிழில் மட்டும் ஏன் 'நாராயணா' இல்லை: 'பொன்னியின் செல்வன்' குறித்து மணிரத்னம் அளித்த விளக்கம்!

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30-ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: அதிரடி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது

வெங்கட்பிரபு - நாக சைதன்யா படம் குறித்த மாஸ் தகவல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்கள்

பிரியங்கா மோகனை அடுத்து இன்னொரு நாயகி: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.