மூளையை பத்தி பேசறவங்களுக்கு மூளை இருக்கணும்.. அண்ணாமலையை கண்டித்து சினேகன் பிரச்சாரம்..!

  • IndiaGlitz, [Monday,April 15 2024]

சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கமல்ஹாசனின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கவிஞர் சினேகன் ’மூளை உள்ளவர்கள் தான் மூளையை பற்றி பேச வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் சினேகன் கோவை தொகுதியில் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ’யாரை பார்த்து மூளை இல்லை என்று சொல்கிறாய்? நீ படித்த 20,000 புத்தகத்தில் மூளையை பற்றி எந்த ஒரு புத்தகம் கூட இல்லையா? மூளை இல்லாதவர்கள் எல்லாம் மூளை பற்றி பேசக்கூடாது, மூளையை பற்றி பேசுவதற்கு மூளை இருக்க வேண்டும் என்று கூறினார்.

காக்கி சட்டையை கழட்டி விட்டு காவிச்சட்டையை போட்டதிலிருந்து உங்களுக்கு எவ்வளவு மூளை உள்ளது என்று தெரிய வருகிறது என்று கூறிய சினேகன், கோவையில் வெயில் அதிகமாக அடிப்பதற்கு திமுக தான் காரணம் என்று கூறியுள்ளார், எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு என்று கேலியாக சினேகன் பேசினார்.

நாங்கள் பத்து வருஷம் ஆட்சி செய்தது ட்ரெய்லர் என்று கூறுகிறார், ட்ரெய்லரே இப்படி இருந்தால் மெயின் பிக்சர் எப்படி இருக்கும். 73 ரூபாய் விற்ற பெட்ரோல் டீசல் விலை இன்று 100ஐ தாண்டி விட்டது, ட்ரெய்லரே இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றும் கவிஞர் சினேகன் பேசினார்.

More News

மெய்சிலிர்த்து போனேன்.. வரலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் குறித்து விஷால்..!

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி ஆகியோர் சில படங்களில் இணைந்து நடித்த நிலையில் சமீபத்தில் வரலட்சுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிறது.

பாலிவுட்டில் இருந்து இறக்குமதியாகும் வில்லன், ஹீரோயின்.. ராகவா லாரன்ஸ் படத்தின் மாஸ் அப்டேட்..!

சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் பாலிவுட்டில் இருந்து பிரபல நடிகர்கள் வில்லனாக நடிக்க வருகிறார்கள் என்றும் அதே போல் சில பாலிவுட் நடிகைகள் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்கள்

நீங்கள் இங்கிருந்து அனுப்பப் போவது ஒரு எம்பியை அல்ல, மத்திய அமைச்சரை.. சுந்தர் சி பிரச்சாரம்..!

நீங்கள் இங்கே இருந்து அனுப்பப் போவது ஒரு எம்பியை அல்ல, ஒரு மத்திய அமைச்சரை என தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில்

எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பாலாவுக்கே ஒரு இன்ப அதிர்ச்சி.. கொடுத்தது யார் தெரியுமா?

கேபிஒய் பாலா பொதுமக்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது அவருக்கே

மீண்டும் ஒரே படத்தில் இணைகிறார்களா ரஜினி-சத்யராஜ்? எந்த படம்? இயக்குனர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பாக 'தம்பிக்கு எந்த ஊரு' 'மூன்று முகம்' 'மிஸ்டர் பாரத்' 'பாயும் புலி' 'நான் சிகப்பு மனிதன்' '