மூளையை பத்தி பேசறவங்களுக்கு மூளை இருக்கணும்.. அண்ணாமலையை கண்டித்து சினேகன் பிரச்சாரம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கமல்ஹாசனின் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கவிஞர் சினேகன் ’மூளை உள்ளவர்கள் தான் மூளையை பற்றி பேச வேண்டும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவிஞர் சினேகன் கோவை தொகுதியில் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ’யாரை பார்த்து மூளை இல்லை என்று சொல்கிறாய்? நீ படித்த 20,000 புத்தகத்தில் மூளையை பற்றி எந்த ஒரு புத்தகம் கூட இல்லையா? மூளை இல்லாதவர்கள் எல்லாம் மூளை பற்றி பேசக்கூடாது, மூளையை பற்றி பேசுவதற்கு மூளை இருக்க வேண்டும் என்று கூறினார்.
காக்கி சட்டையை கழட்டி விட்டு காவிச்சட்டையை போட்டதிலிருந்து உங்களுக்கு எவ்வளவு மூளை உள்ளது என்று தெரிய வருகிறது என்று கூறிய சினேகன், கோவையில் வெயில் அதிகமாக அடிப்பதற்கு திமுக தான் காரணம் என்று கூறியுள்ளார், எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு என்று கேலியாக சினேகன் பேசினார்.
நாங்கள் பத்து வருஷம் ஆட்சி செய்தது ட்ரெய்லர் என்று கூறுகிறார், ட்ரெய்லரே இப்படி இருந்தால் மெயின் பிக்சர் எப்படி இருக்கும். 73 ரூபாய் விற்ற பெட்ரோல் டீசல் விலை இன்று 100ஐ தாண்டி விட்டது, ட்ரெய்லரே இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றும் கவிஞர் சினேகன் பேசினார்.
"கமல் மூளையை செக் பண்ண சொன்ன அ.மலை.." வண்டிமேல் ஏறி நின்று சினேகன் ஆவேசம்#snegan #annamalaibjp pic.twitter.com/OhT4JPPkxp
— Thanthi TV (@ThanthiTV) April 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments