பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,May 21 2021]

பாடலாசிரியர், நடிகர் மற்றும் அரசியல்வாதி சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

பாடலாசிரியர் மற்றும் நடிகராக திரையுலகில் வலம் வந்த சினேகன், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் அவர் தான் ரன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பாஸ் முதல் சீசன் முடிந்தவுடன் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக சினேகன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் மணப்பெண் அவருடைய நெருங்கிய உறவினரின் பெண் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தனது திருமணம் கமல்ஹாசன் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனிடம் தேதி கேட்டு இருப்பதாகவும், அவர் தேதி கொடுத்தவுடன் அந்த தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சினேகனுக்கு விரைவில் திருமணம் என்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.