உங்களுக்காகத்தான் எல்லாமே! விஜய் ரசிகர்களுக்கு விவேக் ஆறுதல்
Send us your feedback to audioarticles@vaarta.com
‘பிகில்’ படத்தின் டீசர் வெளியீடு இந்த வாரம் வெளியாக வாய்ப்பில்லை என்றும், அடுத்த வாரம் திங்களன்று ‘பிகில்’ டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் சற்றுமுன் அர்ச்சனா கல்பாதி அவர்களின் பேட்டி வெளிவந்து வைரலாகியுள்ளது.
இந்த பேட்டியின்படி பார்க்கும்போது அடுத்த வார இறுதியில்தான் ‘பிகில்’ டீசர் வெளியாகும் என தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து தயாரிப்பு தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் ‘பிகில்’ படத்தின் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் விவேக் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் விஜய் ரசிகர்கள் அனைவரும் பாசிட்டிவ் கருத்துக்களை மட்டும் தெரிவியுங்கள். உங்கள் கஷ்டம் புரியுது. ஆனால் தயாரிப்பு தரப்பையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அவர்களுக்கு பல சவால்கள் இருக்கும். ஒரு மாஸ் படத்தை தயாரித்து அதை வெளியிடுவது என்பது ஒரு மிகப்பெரிய சவால். இறுதியில் எல்லாமே உங்களுக்காகத்தானே. கோபித்து கொள்ளாமல் படக்குழுவினர்களை வாழ்த்துங்கள்’ என்று கூறியுள்ளார்.
Its my humble request..Send some positivity 2 d team guys. Unga kashtam puriyudhu. But Avangalukkum enna challenges irukumo..Its very tough to handle a massive project. Ungalukaga thana kadaisiyila elame. Kochukama wish us luck??
— Vivek Lyricist (@Lyricist_Vivek) October 5, 2019
Pls Send ur gud Wishes 2 our prod@archanakalpathi https://t.co/9kJvgV53AZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments