பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் லைகாவின் 2 படங்கள்.. இன்னொரு படம் எது தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் பொங்கல் திருநாளில் ‘அயலான்’, ‘கேப்டன் மில்லர்’ ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மற்றும் ‘’மிஷின் சாப்டர் 1’ ஆகிய 4 முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் திருநாளில் வெளியாகும் படங்களில் ஒன்று லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’மிஷின் சாப்டர் 1’ என்ற படம். அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை இந்த படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தையும் வெளிநாடுகளில் ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளது. ’கேப்டன் மில்லர்’ படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாகவும் உலகம் முழுவதும் இந்த படத்தை பிரமாண்டமாக வெளியிட இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
எனவே வரும் பொங்கல் தினத்தில் நிறுவனம் லைக்கா தயாரித்த ’மிஷின் சாப்டர் 1’ மற்றும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ’கேப்டன் மில்லர்’ ஆகிய இரண்டு படத்தையும் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay tuned! 🎟️ Overseas Booking opens soon for #CaptainMiller 💥 Secure your seats for a thrilling ride. Don't miss the chance to be part of the action-adventure!🔥
— Lyca Productions (@LycaProductions) January 4, 2024
Overseas release by @LycaProductions Subaskaran 🤗✨@dhanushkraja #ArunMatheswaran @gvprakash @NimmaShivanna… pic.twitter.com/XGeVEgNklJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com