மீண்டும் 'கத்தி'யை தயாரிக்கின்றது லைகா நிறுவனம்
- IndiaGlitz, [Sunday,July 17 2016]
கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் முதன்முதலாக இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருவது தெரிந்ததே.
இந்நிலையில் 'கத்தி' இந்தி ரீமேக் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் உதவியாளர் இயக்க, லைகா நிறுவனமே மீண்டும் இந்த படத்தை தயாரிக்கின்றது. விஜய் வேடத்தில் அக்சயகுமார் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு Ikka என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தில் அக்சயகுமார் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.