2.0 படத்தில் இருந்து திடீரென விலக்கப்பட்ட பிரபல நிறுவனம்

  • IndiaGlitz, [Saturday,December 09 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் இந்த படம் ஏப்ரலுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தாமதத்திற்கு காரணமாக VFX நிறுவனம் திடீரென படத்தில் இருந்து விலக்கப்பட்டு அதற்கு பதிலாக இன்னொரு பிரபல நிறுவனத்திடம் கிராபிக்ஸ் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட நேரத்தில் கிராபிக்ஸ் பணியை முடித்து தராத ஹாலிவுட் VFX நிறுவனம் மீது லைகா நிறுவனம் வழக்கு போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய நிறுவனமாவது சொன்ன தேதிக்குள் பணியை முடித்து கொடுத்து ஏப்ரல் ரிலீசுக்கு ஒத்துழைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

இன்னும் சற்று நேரத்தில் கவர்னருடன் விஷால் சந்திப்பு

நடிகர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும், அந்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

குஜராத் தேர்தல்: மணக்கோலத்துடன் ஓட்டு போட சென்ற மணமக்கள்

குஜராத் மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை எட்டு மணி முதல் நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி தனிக்கட்சி தொடக்கமா?

கோலிவுட் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், விஷால் உள்பட பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் தேதியை ஹேக்கர்கள் அறிவித்தார்களா? பரபரப்பு தகவல்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவுள்ள 'தமிழ்ப்படம் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

மிஷ்கின்-விக்ராந்த் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் கதை என்ன?

இயக்குனர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானதை பார்த்தோம்