அஜித்துக்கு ஆறுதல் கூறிய லைகா தமிழ்க்குமரன்.. 'ஏகே 62' குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமான நிலையில் அவருக்கு நேரிலும் தொலைபேசிகளிலும் சமூக வலைதளங்களிலும் பலர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். நேற்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனும் அஜித்தை சந்தித்து ஆறுதல் கூறியதாக நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ்குமரன் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி ஆகிய இருவரும் அஜித்தை சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது ’ஏகே 62’ படத்தின் அப்டேட்டையும் தெரிவித்தனர்.

‘ஏகே 62’ படத்தின் நல்ல செய்தி அடுத்த மாதம் வரும் என்று தமிழ் குமரன் கூறினார். இதனை அடுத்து ’ஏகே 62’ திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அடுத்த மாதம் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித் விரைவில் இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் அந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்பே ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார் என்றும் கூறப்பட்டது.