சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தலைவர் 170': சூப்பர் அப்டேட் கொடுத்த லைகா..!

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட்டை லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 170’

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியார், பகத்பாசில், ராணா ரகுபதி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

போலி என்கவுண்டர் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதியில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இன்று முதல் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிவிக்க இருப்பதாக பதிவு செய்துள்ளது. இதனை அடுத்து இன்று முதல் ’தலைவர் 170’ படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வந்து கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.