'பொன்னியின் செல்வன் 2': புரமோஷனை ஆரம்பித்த லைகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவியமான ’பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த படம் உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும் தமிழ் திரை உலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் பெற்ற மாபெரும் வரவேற்பு காரணமாக இரண்டாவது பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு அப்படத்திற்கு செய்த மாபெரும் புரமோஷன் ஒரு காரணமாக இருந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் புரமோஷனை லைகா நிறுவனம் தொடங்கி விட்டது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
Something special is on the horizon. Can you guess what?#PS #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/JCOSL4ISgW
— Lyca Productions (@LycaProductions) December 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments