லைகா சுபாஷ்கரன் கோரிக்கை: 17 அரசியல் கைதிகளை விடுதலை செய்த அரசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் கோரிக்கையை அடுத்து 17 தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லைகா நிறுவனர் சுபாஷ்கரன் சமீபத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களை நேரில் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 அரசியல் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் ஏற்கனவே சிறையில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள் 8 பேருக்கு தலா 25 லட்சம் லைகா சுபாஷ்கரன் வழங்கியுள்ள நிலையில் இனி விடுதலையாகும் ஒவ்வொரு கைதிக்கும் தலா ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் என்று சுபாஷ்கரன் அறிவித்துள்ளார்.
லைகா, சுபாஷ்கரன், விடுதலை,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout