ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

  • IndiaGlitz, [Saturday,August 26 2023]

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘சந்திரமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் திடீரென எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு சுபாஷ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்.

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதும், குறிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இது குறித்து கேள்விப்பட்ட சுபாஷ்கரன் அவரது அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைகா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தாய் உள்ளத்தோடு ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் வளர்ந்து வரும் குழந்தைகளின் நலனுக்காக உடனடியாக ஒரு கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்த சுபாஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதில் யார் உண்மையான மகாலட்சுமி? விஜயகுமார் மகளின் க்யூட் புகைப்படங்கள்..!

நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சுமி கடாட்சமாக போட்டோஷூட் புகைப்படங்கள வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது

காதலருடன் வெளிநாட்டு பயணமா? தமன்னாவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இருவரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய விமான நிலையத்திற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அங்கேயும் தேள் டாட்டூ.. இங்கேயும் தேள் டாட்டூ.. த்ரிஷா புகைப்படதால் வேற லெவலில் யோசிக்கும் ரசிகர்கள்..!

 கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்த சூர்யாவின் கழுத்தில் தேள் டாட்டூ இருந்ததை போல் சமீபத்தில் வெளியாகியுள்ள த்ரிஷாவின் புகைப்படத்திலும் தேள் டாட்டூ இருப்பதை

வெறித்தனம்: சூர்யாவின் 'கங்குவா' படத்தை பார்த்த பிரபலத்தின் முதல் விமர்சனம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை இல்லாத அளவு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

உதவி கேட்டு வந்த முதிய தம்பதிகள்.. அடுத்த விநாடியே உதவி செய்த புஸ்ஸி ஆனந்த்..!

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் கூட்டம் இன்று நடத்தப்பட்ட நிலையில் இந்த கூட்டம் முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது உதவி கேட்டு வந்த முதிய