'லூசிபர் 2 எம்புரான்' பட இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன்

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரமாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் இயக்குனருமான பிருத்விராஜ் சுகுமாரனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் சுகுமாரன் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்த அவரை வெளிநாட்டில் இருக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் பகிர்ந்து கொண்டார். இதனால் உற்சாகமடைந்த இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன், படத்தின் தயாரிப்பாளரான சுபாஷ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.‌

லைக்கா புரொடக்ஷன்ஸ் - ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தில் மோகன்லாலுடன் இந்திய திரையுலகைச் சார்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.

சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

More News

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைகிறதா தமன்னாவின் படம்?

தீபாவளி தினத்தன்று கார்த்தியின் 'ஜப்பான்'  கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா 2' மற்றும் விக்ரம் பிரபு நடித்த 'ரெய்டு' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள

'லியோ' முன்பதிவு தொடங்குவது எப்போது? 'தளபதி 68' தயாரிப்பாளர் விளக்கம்..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் உள்ள பல முக்கிய திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை.

அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. வேற லெவல் எதிர்பார்ப்பு..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா மற்றும் ரெஜினா  நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது மூன்றாவது ஆக பிரபல நடிகை ஒருவர் இந்த படத்தில் இணைய

'லியோ' திரைப்படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி.. அரசின் அதிரடி உத்தரவு..!

 தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

அஜித் படம் மிஸ் ஆனால் என்ன? 'தல' படத்தை டைரக்டர் செய்யும் விக்னேஷ் சிவன்..!

அஜித் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படம் எதிர்பாராத வகையில் டிராப் செய்யப்பட்டு விட்டது. ஆனால் தற்போது அவர் தல தோனி நடிக்க உள்ள விளம்பர