கல்கியின் வீடு தேடி சென்ற லைகா சுபாஷ்கரன்.. என்ன கொடுத்தார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இன்று வெற்றி விழா நடைபெற்றது
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் மணிரத்னம், சுபாஷ்கரன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்
இதனை அடுத்து ’பொன்னியின் செல்வன்’ வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனத்தின் சார்பில் ’பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது
கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சுபாஷ்கரன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் நேரடியாக வழங்கினர். இந்த சந்திப்பின்போது கல்கியின் குடும்பத்தினர் அனைவரும் உடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் லைகா நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Our Chairman #Subaskaran & director #ManiRatnam donated a sum of Rs 1 Crore to the Kalki Krishnamurthy Memorial Trust.
— Lyca Productions (@LycaProductions) November 5, 2022
A cheque was presented to the trust's Managing Trustee Seetha Ravi in the presence of Kalki Rajendran, son of Kalki.#PS1 #PonniyinSelvan1 @MadrasTalkies_ pic.twitter.com/IuyLmMrzEw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments