ரஜினி படத் தயாரிப்பாளருடன் இணைந்த 'ரஜினிமுருகன்' இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,December 19 2015]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய இயக்குனர் பொன்ராமின் 2வது படமான 'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்தியாவின் மிக அதிக பட்ஜெட் படமான எந்திரன் 2' படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள மற்றொரு படத்தைத்தான் பொன்ராம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பொன்ராம் இரண்டு கதைகள் கைவசம் வைத்துள்ளதாகவும், இரண்டுமே தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடித்துள்ளதாகவும், விரைவில் இரண்டில் ஒரு கதையை தேர்வு செய்து படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் பொன்ராம் கூறியுள்ளார். இரண்டு கதைகளுமே அவருடைய முந்தைய படங்களை போன்று நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் 'எந்திரனுக்கு ஜல்லிக்கட்டால் சிக்கல்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட எந்திரன் 2' படத்திற்கு எமிஜாக்சனால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

'தங்க மகன்' திரைவிமர்சனம்.

'வேலையில்லா பட்டதாரி' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் மீண்டும் தனுஷ்-வேல்ராஜ் இணைந்த படம், சமந்தா...

மூன்று மொழிகளில் ரீமேக் ஆகும் 'ஈட்டி'

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கிய ஈட்டி' கடந்த வெள்ளியன்று ரிலீஸாகி ஊடகங்கள்...

நாகரீகம் இழந்த தொற்று நோய். பீப் பாடல் குறித்து பாடலாசிரியர்கள் கூட்டறிக்கை

சமீபத்தில் வெளியான சர்ச்சைக்குரிய பீப் பாடலுக்கு பெண்கள் அமைப்பு மட்டுமின்றி எழுத்தாளர்கள், ...

'எந்திரன் 2' படத்தில் நடிக்கும் பஸ் கண்டக்டரும், ஓட்டல் சர்வரும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஸ் கண்டக்ராக பணிபுரிந்தார் என்பது அனைவரும்...