'சந்திரமுகி 2' ரசிகர்களுக்கு செம்ம அப்டேட்.. இன்று மாலை கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸ், சந்திரமுகி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். பி. வாசு இயக்கியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் பாடல் காட்சிக்காக சமீபத்தில் படக்குழுவினர் ஜார்ஜியா சென்றனர் என்பதும் ராகவா லாரன்ஸ் மற்றும் மகிமா நம்பியார் நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘ஸ்வாகதாஞ்சலி’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது. ஸ்ரீநிதி திருமலா பாடிய இந்த மெலடி பாடல் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலுக்கு கலா மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது