'வேட்டையன்' போஸ்டரை திடீரென வெளியிட்ட லைகா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்’ திரைப்படத்தின் ஸ்டில் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படம் வரும் அக்டோபர் மாதம் அல்லது தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லைகா நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இந்த போஸ்டரில் பகத் பாஸில் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியவர்களுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Our Birthday Boy Fahadh Faasil 🥳 with the two pillars of Indian cinema, Superstar @rajinikanth & Shahenshah @SrBachchan 🤩 from the sets of #Vettaiyan 🕶️#HBDFahadhFaasil #FahadhFaasil #வேட்டையன் 🕶️ pic.twitter.com/ync10wAsug
— Lyca Productions (@LycaProductions) August 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com