'லால் சலாம்' படத்தில் ரஜினியின் கேரக்டர்.. அட்டகாசமான போஸ்டரை வெளியிட்ட லைகா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ’லால் சலாம்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்க இருப்பதாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டு அவருடைய கேரக்டரையும் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் திரைப்படம் ’லால் சலாம்’. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் நடைபெற உள்ளது.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் மொய்தின் பாய் ஆட்டம் ஆரம்பம் என்று ஒரு அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த போஸ்டரில் ‘சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக’ என்ற கேப்ஷன் உடன் வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Everyone’s favourite BHAI is back in Mumbai 📍 Make way for #Thalaivar 😎 SuperStar 🌟 #Rajinikanth as #MoideenBhai in #LalSalaam 🫡
— Lyca Productions (@LycaProductions) May 7, 2023
இன்று முதல் #மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்…! 💥
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
🌟 @rajinikanth @TheVishnuVishal & @vikranth_offl
🎥… pic.twitter.com/OE3iP4rezK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments