விஷ்ணு விஷால் பிறந்தநாளில் சிறப்பு பரிசளித்த லைகா.. வைரல் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நேற்றுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’லால் சலாம்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் விஷ்ணு விஷால் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்பதும் கேக் வெட்டிய புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் ’லால் சலாம்’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் விஷ்ணு விஷால் பிறந்த நாளில் புதிய போஸ்டர் ஒன்றை சிறப்பு பரிசாக வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அவர் கிரிக்கெட் விளையாடும் போஸில் இருக்கிறார் என்பது மட்டுமின்றி திருநாவுக்கரசு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஷ்ணு விஷால் இந்த படத்தை கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த போஸ்டர் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
’லால் சலாம்’ படம் மட்டுமின்றி ‘மோகன் தாஸ்’ மற்றும் ‘ஆர்யான்’ ஆகிய படங்களிலும் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார் என்பதும், இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#LalSalaam 🫡 team wishes our Thirunavukarasu 🏏 a Happiest Birthday 🥳 Wishing you more & more positivity, health & happiness! 💯💥@TheVishnuVishal #HBDVishnuVishal pic.twitter.com/cSLzsvEZzc
— Lyca Productions (@LycaProductions) July 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments