பொங்கல் ரிலீஸில் இன்னொரு லைகா படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் இன்னொரு படமும் அதே பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினியின் ’லால் சலாம்’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ தனுஷின் ’கேப்டன் மில்லர்’ சுந்தர் சி யின் ’அரண்மனை 4 ’ ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படங்கள் அறிவிக்கப்பட்டபடி வெளியாகுமா? அல்லது ஒரு சில படங்கள் தள்ளிப் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இன்னொரு திரைப்படமான அருண் விஜய்யின் ’மிஷின் 1’ என்ற திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், அபி ஹாசன் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்
ஒரே நிறுவனத்தின் இரண்டு படங்கள் ஒரே தினத்தில் அதுவும் பொங்கல் மாதிரி திருவிழா நேரத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Mark your calendars! 🗓️ Our 'MISSION' is all set to roll on PONGAL 2024 ☀️🌾 Get ready for an High-octane action extravaganza! 💣💥#MissionChapter1 in cinemas near you from PONGAL 2024! 📽️✨@arunvijayno1 Director #Vijay @gvprakash @iamAmyJackson @NimishaSajayan @AbiHassan_… pic.twitter.com/GEPjyMkF76
— Lyca Productions (@LycaProductions) December 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments